வடக்கு கிழக்கில் கடுமையான வெப்பநிலை

நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

LIKE US ON FACEBOOK

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷ்ணமான காலநிலை நிலவும் பகுதிகளில் உள்ளோர் அதிகம் நீர் அருந்துமாறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிழலான பகுதிகளில் நேரத்தை செலவிடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், கடுமையான வேலைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like
error: .