சூரிக்கு தனி இடம்

இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனி இடம் இருக்கிறது.

LIKE US ON FACEBOOK

சந்தானம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதன் பின்னர் புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.

‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதா நாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் 8 மாதங்களாக சூரி இதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

You might also like
error: .