சூர்யாவுக்கு போட்டியாக சூரி சிக்ஸ்பேக்

கடந்த 8 மாத கடின உழைப்புக்குப் பின், தன்னை சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாற்றியுள்ளார் நடிகர் சூரி. அவரது புதிய தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

LIKE US ON FACEBOOK

பரோட்டா காமெடி மூலம் பிரபலம் ஆனவர் சூரி .

தமிழில் முன்னணி நடிகர்களான, அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்
உள்ளிட்டோருடன் நடித்து, தனக்கென சினிமாவில் சிறப்பான இடத்தை உருவாக்கினார்
பரோட்டாசூரி . அதிலும், சிவகார்த்திகேயன்- சூரி வெற்றிக்ககூட்டணிக்குத் தனி ரசிகர்களே உண்டு.

சிக்ஸ்பேக்குடன் நடிகர் சூரி நின்றுகொண்டிருப்பது போன்றதொரு புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால, கடின உழைப்பு இது. இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்று கூறியுள்ளார்

எதோ கேரிபேக் வசிக்கிற மாதிரி அசால்ட்டா  சிக்ஸ்பேக் வச்சுக்கிறாங்களே

 

You might also like
error: .