கூரையை பிய்த்துக் கொடுப்பது என்பது இதுவா

“கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்” என்ற கிராமிய பழமொழிக்கு ஏற்ற வகையில் ஆபிரிக்கர் ஒருவருக்கு கனடாவில் அதிர்ஸ்டமழை பொழிந்து வருகின்றது.

LIKE US ON FACEBOOK

கனடாவில், கடந்த 5 மாதத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் லாட்டரி மூலம் 25 கோடி இந்திய ரூபா சம்பாதித்துள்ளார்.
கனடாவில் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் மெல்கிக் (28) மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது நாட்டில் இருந்து குடும்பத்துடன் புலம் பெயர்ந்து கனடா வந்து தங்கினார்.

இவர் கடந்த ஏப்ரல் முதல் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அவற்றின் மூலம் 5 மாதங்களில் ஜாக்பாட் பரிசு மூலம் 25 கோடி ரூபா சம்பாதித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.11 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. 2-வது தடவையாக அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.14 கோடி ஜாக்பாட் பரிசு தொகை கிடைத்துது. இதன் மூலம் 5 மாதத்தில் இவர் 25 கோடி சம்பாதித்துள்ளார்.

முதலில் கிடைத்த லாட்டரி சீட்டு பரிசு தொகையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு புதிய வீடு வாங்கி கொடுத்தார். 2-வது லாட்டரி சீட்டு குலுக்கலில் கிடைத்த பரிசு தொகையை வியாபார அபிவுருத்திக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஆங்கில அறிவை மேம்படுத்தி வியாபாரத்தை பெருக்க மெல்கிக் முடிவு செய்துள்ளார். தனக்கு தச்சு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

You might also like
error: .