மனித உரிமை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கத் தயார்

மனித உரிமை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதற்கு தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு, இன்று (14) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது, இதுவரை எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை குறிப்பிட்டார்.
ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தாங்கள் முகங்கொடுக்கத் தாயார் எனவும், முன்னாள் ஆணையாளர்கள் போன்று, தற்போதைய ஆணையாளரும் தங்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்திலான கோரிக்கை ஒன்றை இம்மாதம் 25ஆம் திகதி, ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You might also like
error: .