முன்னாள் நிதி அமைச்சருக்கு எதிராக வழக்கு

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியதற்கு எதிராகவே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LIKE US ON FACEBOOK

ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like
error: .