இ.சி.ஜி வசதியுடைய கைக்கடிகாரம் அறிமுகம்

பிரபல ஆப்பிள் நிறுவனம் இ.சி.ஜி வசதியுடைய கைக்கடிகாரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய கைக்கடிகாரங்கள் அறிமுகமாகி இருக்கிறது.

LIKE US ON FACEBOOK

ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30 வீதம் பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50வீதம் அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: .