எனக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது

தமக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார்.
பாரிய புயல் காற்று காரணமாக பியட்ரோ ரிக்கோவில் ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்கள் பிழையானவை என குறிப்பிட்டுள்ளார்.
புயல் காற்றினால் பியட்ரோ ரிக்கோவில் சுமார் மூவாயிரம் பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த எண்ணிக்கை விபரங்கள் பிழையானவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தம்மை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் ஜனநாயகக் கட்சி இவ்வாறு பியட்ரோ ரிக்கோ உயிர்ச் சேத விபரங்களை மிகைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மை நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தின் பின்னர் பியட்ரோ ரிக்கோவிற்கு தாம் சென்ற போது உயிரழந்தோர் தொகை 6 மதல் 18 வரையில் காணப்பட்டது எனவும் பின்னர்; பெரும் எண்ணிக்கையலானவர்கள் உயிரிழந்தனர் என ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காபை பாரிய புயல் ஒன்று தாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ட்ராம்ப் இந்தக் கருத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: .