தனி அமைப்பு தொடங்குவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

தனி அமைப்பு தொடங்குவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பெயரில் தனி அமைப்பு தொடங்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் கட்சி தலைமை பதவியும் மு.க ஸ்டாலின் வசம் வந்தது. இதனை அடுத்து மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார்.
இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

LIKE US ON FACEBOOK

ஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்தே தவிர தமது கருத்து கிடையாது என அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

You might also like
error: .