தீவிரவாதியின் கணக்கை முடக்கிய முகநூல்

தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரின் முகநூல் கணக்கை, முகநூல் நிறுவனம் முடக்கியுள்ளது.
தீவிரவாதியொருவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரிலான சமூக ஊடக வலையமைப்புக் கணக்கில் பதிவுகள் இடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் தீவிரவாதியான Zakaria Amara அதியுச்ச பாதுகாப்பு உடைய கனடாவின் Millhaven சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த தீவிரவாதி சமூக ஊடக வலையமைப்புக்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.
ரொரன்டோவில் ட்ரக் வண்டியொன்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்த காரணமாக சாகாரியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கடந்த ஆறு மாதங்களாக சாகாரியா முகநூலில் பதிவுகளை இட்டுள்ளார்.
தாம் ஏன் பயங்கரவாதத்தை தெரிவு செய்தேன் என்பது பற்றிய விளக்கத்தையும் சாகாரியா முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, சமூக தர நிர்ணயங்களை கருத்திற் கொள்ளாத காரணத்தினால் சாகாரியாவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பாரிய கூட்டுப் படுகொலையாளிகள் முகநூலில் கணக்குப் பேணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலிக் கணக்குகளை பேணி குழப்பங்களை விளைவிக்கச் செய்ய அனுமதி கடையாது என தெரிவித்துள்ளர்.
சாகாரியாவின் முகநூல் கணக்கு மிசிசிப்பி பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.

You might also like
error: .