Apple நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுகம்

Apple நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் அதி நவீன கேஜெட்ஸ் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

LIKE US ON FACEBOOK

இந்நிலையில் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆப்பள், ஐபோன்கள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் புதிய படைப்புகளை அறிமுகம் செய்தது.

தற்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பட்ஜெட் பயனாளர்களுக்கான புதிய மாடலையும் ஆப்பிள் நிறுவனம அறிமுகம் செய்தது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் XR. 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது.
5 வித நிறங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன் ஓசு போனில் 6.1 இஞ்ச் அளவிலான லிக்விடு ரெடினா டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்ட், முகத்தை கணிக்கும் ஐடி, 120 ஹெட்ஸ் கொண்ட ஆடியொ போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஏ12 பையோனிக் எஸ்ஓசி உடன் கூடிய 6 சிபியூ பெற்றுள்ளது. 4 ஜிபியூ கோர்ஸுடன் கூடிய நியூரல் எஞ்சின் இதில் உள்ளது.

இந்த போனின் முன்பக்க கேமரா 7 எம்.பி உள்ளது. அதேபோல பின்பக்க கேமரா 12 எம்.பி உள்ளது. ஐபோன் ஓசு போன் 1080பி தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: .