எல்சல்டோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பத்தாண்டுகள் சிறை

எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி என்தோனியா சகாவுக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எல்சல்வடோர் மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள ஓர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
பணமோசடி மற்றும் பொதுமக்களின் பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக 53 வயதான என்தோனியா சகா, கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

LIKE US ON FACEBOOK

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி என்தோனியா சகா, 300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கையாடிய குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், 260 மில்லியன் டொலர் பணமும் தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.

கடந்த 2004-2009 வரை ஆட்சியில் இருந்த என்தோனியா சகாவின் கட்சியைச் சேர்ந்த பணமோசடிகளுக்கு உதவிபுரிந்த நிர்வாக அதிகாரிகள் 6 பேருக்கும் 3-16 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: .