குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அவசியமானதா?

 

LIKE US ON FACEBOOK

உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் உள்ள ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.
கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.

இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது ‘நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:
இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது ‘நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’

தடுப்பூசிகள்:
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ‘எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம்.

குழந்தைகளுக்கு உரிய காலத்தில் முறையான தடுப்பூசி உடனே போடுங்க

You might also like
error: .